தாமதத்தை மீறி தீர்ப்பு!
கணவரின் மறைவுக்குப் பிறகு ஏற்படும் துயரமும், மன அதிர்ச்சியும் (Mental Shock) காப்பீட்டுத் தொகையை உடனடியாகக் கோர முடியாத நிலையை ஏற்படுத்தும் என நாக்பூர் நுகர்வோர் ஆணையம் கூறியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து, SBI Bank தனது 90 நாட்கள் காலக்கெடு வாதத்தை முன்வைத்தாலும், அதை ஆணையம் நிராகரித்தது. மேலும், இறந்தவர் பயன்படுத்திய 'MasterCard Classic' டெபிட் கார்டுக்கு காப்பீடு இல்லை என்றும், வங்கி தனியாக காப்பீட்டு ஆவணங்களை வழங்கவில்லை என்றும் SBI தரப்பில் வாதிடப்பட்டது.
வங்கியின் வாதம் நிராகரிப்பு!
ஆனால், 'MasterCard Classic' கார்டுகள் காப்பீட்டு வரம்பிலிருந்து விலக்கப்பட்டவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஆணையம் கண்டறிந்தது. மற்ற கார்டுதாரர்கள் எந்தக் கூடுதல் செலவும் இன்றி காப்பீட்டுப் பலன்களைப் பெற்றதற்கான ஆதாரங்கள் இருந்தன. இதனால், SBI Bank-ன் இந்த அணுகுமுறை நியாயமற்றது என்றும், இது ஒரு வெளிப்படையான 'சேவைக் குறைபாடு' (Deficiency in Service) என்றும் ஆணையம் கூறியது.
உத்தரவின் விவரங்கள்!
இதையடுத்து, SBI Bank உடனடியாக ₹5 லட்சம் காப்பீட்டுத் தொகையை, செப்டம்பர் 5, 2019 அன்று காப்பீடு கோரிய தேதியிலிருந்து ஆண்டுக்கு 6% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சட்டச் செலவுகளுக்காக ₹10,000 வழங்கவும், தாமதத்தின் அடிப்படையில் காப்பீட்டை மறுத்ததை நியாயமற்றது என்றும் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.