ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரும் வகையில், வங்கிகளின் 'Operational Risk Capital' கணக்கீட்டு முறையில் புதிய மற்றும் கடுமையான விதிகளை Reserve Bank of India (RBI) அறிவித்துள்ளது. இது வங்கிகளின் பேலன்ஸ் ஷீட் மற்றும் லாப விகிதங்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
இந்திய வங்கித்துறையை உலகளாவிய Basel III தரநிலைகளுக்கு ஏற்ப மாற்றும் நோக்கில், Reserve Bank of India (RBI) புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இனி வங்கிகள் தங்கள் செயல்பாட்டு அபாயங்களை (Operational Risk) கணக்கிடும் முறை முற்றிலும் மாறப்போகிறது.
புதிய விதிமுறைகளின் சாராம்சம்:
இந்த முறை வங்கிகள் தங்களின் நிதிச் செயல்பாடுகளை மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும்: Interest, Lease, and Dividend, Services, மற்றும் Financial Component. பழைய முறைகளை விட இது அதிக துல்லியமானதாக இருக்கும். குறிப்பாக, டிரேடிங் டெஸ்க்குகளைக் கொண்ட வங்கிகள், இனி தங்களின் Interest Rate Derivative சொத்துக்களை அதன் Notional Value-க்கு பதிலாக, Fair Value அடிப்படையில் கணக்கிட வேண்டும்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை:
- Internal Loss Multiplier: வங்கிகள் தங்களின் கடந்த 10 வருட கால இழப்புத் தரவுகளைப் பயன்படுத்த வேண்டும். அபராதங்கள் மற்றும் சொத்து சேதங்கள் அனைத்தும் இந்த கணக்கீட்டில் சேர்க்கப்படும்.
- Capital Pressure: வங்கிகள் இப்போது அதிக மூலதனத்தை (Capital Buffer) கையிருப்பில் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது வங்கிகளின் Return on Equity (ROE) விகிதத்தில் அழுத்தத்தை உருவாக்கலாம்.
ஏற்கனவே செயல்பாட்டு ரீதியாக அதிக சிக்கல்களைச் சந்தித்த வங்கிகள், இந்த மாற்றங்களால் அதிகப்படியான மூலதனத் தேவையை எதிர்கொள்ள நேரிடும். எனவே, வரும் காலங்களில் வங்கிகளின் காலாண்டு அறிக்கைகளில் மேலாண்மை தரும் விளக்கங்களை உன்னிப்பாகக் கவனிப்பது முதலீட்டாளர்களுக்கு அவசியமாகும்.
