ஏன் இந்த மாற்றம்?
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வர்த்தக வங்கிகள் (Commercial Banks) கட்டாயம் வைத்திருக்க வேண்டிய Investment Fluctuation Reserve (IFR) என்ற நடைமுறையை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் மே 18, 2026 முதல் அமலுக்கு வருகிறது. சந்தை இடர் (Market Risk) மற்றும் முதலீட்டு மேலாண்மைக்கான (Investment Portfolio Management) விதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. IFR என்பது, குறிப்பாக சந்தை விலையில் மதிப்பிடப்படும் முதலீடுகளின் மதிப்பு குறையும் போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்து வங்கிகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு கூடுதல் பாதுகாப்பு வளையமாகும் (Safety Net).
நிதி எங்கு ஒதுக்கீடு செய்யப்படும்?
IFR ரத்து செய்யப்பட்ட பிறகு, மே 17, 2026 நிலவரப்படி இந்த Reserve-ல் உள்ள நிதி, சட்டப்பூர்வ ரிசர்வ் (Statutory Reserves), பொது ரிசர்வ் (General Reserves) அல்லது லாப நஷ்டக் கணக்கில் (Profit and Loss Account) சேர்க்கப்படும். வெளிநாட்டு வங்கிகளைப் பொறுத்தவரை, இந்தியாவின் கிளைகளில் உள்ள IFR நிதி, அந்த வங்கிகளின் இந்தியக் கணக்குகளில் உள்ள சட்டப்பூர்வ ரிசர்வ்-க்கு மாற்றப்படும் அல்லது இந்தியாவில் ஈட்டப்பட்டு, கிளை செயல்படும் வரை தாயகம் அனுப்ப முடியாத லாபமாக (Retained Profits) பதிவு செய்யப்படும்.
மற்ற வங்கிகளுக்கு என்ன?
கூட்டுறவு வங்கிகள் (Cooperative Banks), சிறு நிதி வங்கிகள் (Small Finance Banks - SFBs) மற்றும் கட்டண வங்கிகள் (Payments Banks - PBs) போன்றவற்றுக்கு தனிப்பட்ட விதிமுறைகள் பொருந்தும். SFBs மற்றும் PBs-க்கு, மற்ற அனைத்துத் தேவையான ஒதுக்கீடுகளுக்கும் பிறகு கிடைக்கும் நிகர லாபத்தில் (Net Profit) இருந்து IFR நிதியை மாற்ற வேண்டும் என இறுதி விதிகள் தெரிவிக்கின்றன. இந்த ஒழுங்குமுறை மாற்றம், வங்கிகளுக்கு தங்கள் மூலதனம் மற்றும் ரிசர்வ் நிதிகளை நிர்வகிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையைக் (Flexibility) கொடுக்கும்.