மோசடிகளைத் தடுக்க RBIயின் புதிய திட்டம்!
சமீப காலமாக, அவசரத் தேவைகளை பயன்படுத்தி ஏமாற்றும் 'Authorised Push Payment (APP)' எனப்படும் மோசடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ₹10,000க்கு மேல் நடக்கும் மோசடிப் பரிவர்த்தனைகள், மொத்த மோசடிகளில் 45% ஆகவும், மதிப்பு அடிப்படையில் 98.5% ஆகவும் உள்ளன. இதைத் தடுக்கவே RBI இந்த புதிய விதிமுறையைக் கொண்டு வந்துள்ளது.
எப்படி இந்த தாமதம் வேலை செய்யும்?
இந்த 1 மணி நேர தாமதத்தின் மூலம், வங்கிகள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை தற்காலிகமாக டெபிட் செய்து, ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை நடக்கிறதா என்பதை கண்டறிய நேரம் கிடைக்கும். சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்படும். அதையும் மீறி வாடிக்கையாளர் பணம் அனுப்ப விரும்பினால், பரிவர்த்தனை நிறைவடையும். ஏற்கனவே உள்ள வியாபாரப் பரிவர்த்தனைகள் (Merchant Payments) மற்றும் தொடர் பிடித்தங்களுக்கு (Recurring Payments) இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு உடனுக்குடன் பணம் அனுப்ப 'Whitelisting' வசதியும் கொண்டுவரப்படலாம்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு
வயது முதிர்ந்தவர்கள் (70 வயதுக்கு மேல்) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் RBI யோசித்துள்ளது. ₹50,000க்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு, ஒரு 'நம்பிக்கைக்குரிய நபர்' (Trusted Person) மூலம் இரண்டாவது அங்கீகாரம் (Authentication) பெற வேண்டியிருக்கும். இந்த நம்பிக்கைக்குரிய நபரை மாற்றினால், 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
கணக்கு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள்
மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் கணக்குகளை கண்காணிக்கவும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. கூடுதல் சோதனைகள் இல்லாத கணக்குகளில், ஆண்டுக்கு ₹25 லட்சம் வரை மட்டுமே பணப் பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படலாம். அதற்கு மேல் வரும் தொகைகள், சரிபார்க்கப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். மேலும், கிரெடிட் கார்டு போல, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பரிவர்த்தனை வரம்புகளை (Transaction Limits) நிர்ணயிக்க அல்லது ஒரே கிளிக்கில் அனைத்து டிஜிட்டல் பேமெண்ட்டுகளையும் முடக்க ('Kill Switch') வசதி கொண்டுவரவும் RBI பரிசீலித்து வருகிறது. இது குறித்த கருத்துக்களை மே 8, 2026 வரை RBI பெற்றுக்கொள்ளும்.