லாபமும் டிவிடெண்டும்
கம்பெனியின் நிதிநிலை அறிக்கையின்படி, பங்குதாரர்களுக்கு ₹2.75 வீதம் இறுதி டிவிடெண்டாக மொத்தம் சுமார் ₹688.7 கோடி தொகையை வழங்க L&T Finance முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் மொத்த லாபம் (Consolidated Net Profit) கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 26.8% அதிகரித்து ₹807 கோடி ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலாண்டில் இந்த லாபம் ₹636 கோடி ஆக இருந்தது.
ரீடெய்ல் கடன் வளர்ச்சி
இந்த லாப உயர்வுக்கு முக்கிய காரணம், நிறுவனத்தின் ரீடெய்ல் பிசினஸ் (Retail Business) அமோக வளர்ச்சி அடைந்துள்ளது தான். குறிப்பாக, இந்த காலாண்டில் ரீடெய்ல் கடன் விநியோகம் (Retail Loan Disbursements) 62% அதிகரித்து, ₹24,107 கோடி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இது நிறுவனத்தின் அனைத்து தயாரிப்பு வகைகளிலும் (Product Categories) நல்ல முன்னேற்றத்தையும், முழுமையாக ரீடெய்ல் சார்ந்த பிசினஸ் மாடலுக்கு மாறியதன் வெற்றியையும் காட்டுகிறது. தற்போது, போர்ட்ஃபோலியோவில் 98% ரீடெய்ல் கடன்களாகவே உள்ளன.
பல்வேறு பிரிவுகளில் கடன் விநியோகம்
பல்வேறு பிரிவுகளிலும் சிறப்பான வளர்ச்சி பதிவாகியுள்ளது. ரூரல் பிசினஸ் ஃபைனான்ஸ் (Rural Business Finance) கடன் விநியோகம் 41% உயர்ந்து ₹7,208 கோடி எட்டியுள்ளது. பெர்சனல் லோன்ஸ் (Personal Loans) 98% அதிகரித்து ₹3,786 கோடி ஆனது. ஃபார்மர் ஃபைனான்ஸ் (Farmer Finance) 16% வளர்ந்து ₹2,037 கோடி என்றும், டூ-வீலர் ஃபைனான்ஸ் (Two-wheeler Finance) 58% உயர்ந்து ₹2,930 கோடி ஆகவும் பதிவாகியுள்ளது. ஹவுஸிங் லோன்ஸ் (Housing Loans) மற்றும் லோன் அகெயின்ஸ்ட் ப்ராப்பர்ட்டி (Loan Against Property) பிரிவில் 20% வளர்ச்சி கண்டு, மொத்தம் ₹30,009 கோடி புத்தக அளவை எட்டியுள்ளது. எஸ்எம்இ ஃபைனான்ஸ் (SME Finance) கடன் விநியோகம் 20% உயர்ந்து ₹1,838 கோடி ஆகவும், அதன் புத்தக அளவு 30% வளர்ந்து ₹8,507 கோடி ஆகவும் பதிவாகியுள்ளது. கோல்டு லோன் (Gold Loan) புத்தகமும் ₹2,845 கோடி ஆக உள்ளது.
சொத்து தரம் மற்றும் லாபம்
நிதி அளவீடுகளும் (Financial Metrics) மேம்பட்டுள்ளன. கிரெடிட் செலவுகள் (Credit Costs) முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இருந்த 2.83% லிருந்து 2.64% ஆக குறைந்துள்ளது. கம்பெனியின் சொத்து மீதான வருவாய் (RoA) 2.40% ஆகவும், பங்கு மீதான வருவாய் (RoE) 10.13% ஆகவும் பதிவாகியுள்ளது.
