கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் மொத்த வருவாய் (Total Income) சற்று சரிந்துள்ளது. இது 1.3% குறைந்து ₹7,212 கோடியாக உள்ளது (முந்தைய ஆண்டு ₹7,304 கோடி). இருந்தாலும், நெட் ப்ராஃபிட் 9% வளர்ச்சி அடைந்தது பங்குதாரர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த நிதிநிலை முடிவுகளைத் தொடர்ந்து, LIC Housing Finance ஷேர் விலை 3.17% உயர்ந்து ₹585.65 என்ற விலையில் வர்த்தகமானது. இது, தேசிய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான Nifty 50-ன் 0.14% ஏற்றத்தை விட சிறப்பாகும்.
