காப்பீட்டுத் தகவல்களை ஒருங்கிணைக்க IRDAI புதிய 'Public Insurance Registry' (PIR) திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் கிளைம் (Claim) செய்வதில் உள்ள குளறுபடிகள் குறையும். செப்டம்பர் 30, 2026 வரை கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான (IRDAI), காப்பீட்டுத் துறையில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் 'Public Insurance Registry' (PIR) குறித்த ஆலோசனைக் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பாக (DPI) செயல்படும்.
unclaimed பணத்தை மீட்க வழி?
தற்போது காப்பீட்டுத் துறையில் தகவல்கள் சிதறி இருப்பதால், பாலிசிதாரர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதில் சிரமங்களைச் சந்திக்கின்றனர். பிப்ரவரி 28, 2026 நிலவரப்படி, சுமார் ₹8,973.89 கோடி அளவுக்கு காப்பீட்டுப் பணம் unclaimed ஆக உள்ளது. இந்த புதிய பதிவு முறை (Registry) செயல்பாட்டுக்கு வந்தால், பாலிசிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எளிதாக பாலிசிகளைக் கண்டறியவும், கிளைம் செய்யவும் முடியும்.
சவால்கள் என்ன?
இந்தத் திட்டம் நன்மைகளைத் தந்தாலும், சில நடைமுறைச் சவால்கள் உள்ளன:
- Data Privacy: கோடிக்கணக்கான மக்களின் மருத்துவ மற்றும் நிதித் தகவல்கள் இதில் கையாளப்படுவதால், சைபர் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
- Technical Upgrade: பழைய தொழில்நுட்பத்தில் இயங்கும் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள், புதிய இந்த மேம்பட்ட கட்டமைப்புடன் (Federated Model) இணைய அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
இது தற்போது ஆலோசனை நிலையிலேயே இருப்பதால், இறுதி விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் பங்குதாரர்களின் கருத்துகளைப் பொறுத்தே அமையும்.
