நிதிநிலை அறிக்கை: Q4
வங்கியின் நிகர கடன்கள் (Net Advances) ஆண்டுக்கு ஆண்டு 16% உயர்ந்து ₹2.53 லட்சம் கோடியை எட்டியுள்ளன. மார்ச் 31 நிலவரப்படி, மொத்த வணிகம் (Total Business) 14% வளர்ந்து ₹6 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது கடன் சந்தையில் வங்கியின் வலுவான நிலையை காட்டுகிறது.
டெபாசிட் வளர்ச்சி மற்றும் செலவுகள்
மொத்த வைப்புத்தொகை (Total Deposits) 12% உயர்ந்து ₹3.5 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால், குறைந்த விலை வைப்புத்தொகையான CASA (Current Account and Savings Account) 7% மட்டுமே வளர்ந்து ₹1.54 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது வங்கியின் நிதி செலவுகளை அதிகரிக்கக்கூடும்.
பங்கு விற்பனையில் சிக்கல்
மறுபுறம், IDBI Bank-ல் அரசு மற்றும் LIC-க்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் எதிர்பார்த்த ஆதரவை பெறவில்லை. போதுமான ஏலங்கள் வராததால், இந்த விற்பனை தள்ளிப்போனது. தற்போது வங்கியின் பொதுப் பங்கு (public float) வெறும் 5.29% மட்டுமே உள்ளது.
அடுத்தகட்ட திட்டம்: Offer-for-Sale
இந்த சிக்கலை சமாளிக்க, அரசு Offer-for-Sale (OFS) முறையை பரிசீலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், சந்தையில் அதிக பங்குகளை பட்டியலிட்டு, விலை நிர்ணயத்தை (price discovery) மேம்படுத்தவும், எதிர்கால விற்பனைக்கு வழிவகுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசுக்கு 45.48% மற்றும் LIC-க்கு 49.24% பங்குகள் உள்ளன. இதனால், நியாயமான மதிப்பீட்டிற்கு அதிக பங்குகள் சந்தையில் இருப்பது அவசியம்.