நிதிச் சேவை நிறுவனமான Fibe, வியாழக்கிழமை அன்று தனது கடன் மதிப்பீட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அறிவித்தது. இந்தியா ரேட்டிங்ஸ் அதன் நீண்ட கால மதிப்பீட்டை A- (பாசிட்டிவ் அவுட்லுக்) ஆகவும், CARE ரேட்டிங்ஸ் அதன் குறுகிய கால மதிப்பீட்டை A2+ ஆகவும் உயர்த்தின. Acuite Ratings & Research நிறுவனமும் முதல் முறையாக 'A' என்ற மதிப்பீட்டை ஸ்திரமான அவுட்லுக் உடன் வழங்கியுள்ளது. இந்த உயர்வுகளானது Fibe-ன் வலுவான அண்டர்ரைட்டிங், ரிஸ்க் மேனேஜ்மென்ட், மேம்படுத்தப்பட்ட லிக்விடிட்டி, டைவர்சிஃபைட் ஃபண்டிங் மற்றும் சரியான நேரத்தில் கடன் திருப்பிச் செலுத்தும் திறனைப் பிரதிபலிக்கின்றன.