லாப வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
நியூயார்க் பங்குச்சந்தையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை Dr. Reddy's Laboratories கொண்டாடியது. ஆனால், கடந்த 2026 நிதியாண்டின் 4ஆம் காலாண்டில் கம்பெனியின் நிகர லாபம் (Net Profit) 90% சரிந்துள்ளது. மேலும், இந்த காலாண்டில் மொத்த லாபம் (Profit Before Tax) 29% குறைந்து, வருவாய் வெறும் 3.2% மட்டுமே அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், ஒருமுறை மட்டும் ஏற்பட்ட செலவுகள் (one-off charges), சொத்து மதிப்பிழப்பு (asset impairments) மற்றும் CAR-T தெரபி போன்ற சில ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) திட்டங்களை கைவிட்டதுதான்.
