Bank of America தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக AI அசிஸ்டண்டுகளிடம் உங்கள் லாக்-இன் விவரங்களைப் பகிர வேண்டாம் என வங்கி அறிவுறுத்தியுள்ளது.
AI அசிஸ்டண்டுகள் மூலம் பட்ஜெட் போடுவது அல்லது ஷாப்பிங் செய்வது இப்போது ட்ரெண்டாகி வருகிறது. ஆனால், இத்தகைய தளங்களிடம் உங்களது யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை பகிர்வது மிகப்பெரிய ரிஸ்க் என்று Bank of America எச்சரித்துள்ளது. இந்த மூன்றாம் தரப்பு (Third-party) மென்பொருட்கள் ஹேக்கர்களுக்கு ஒரு நுழைவு வாயிலாக அமைய வாய்ப்புள்ளது.
பணத்திற்கு நீங்களே பொறுப்பு!
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், AI மூலம் நடக்கும் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் (Transaction) வங்கியால் பொறுப்பேற்க முடியாது. நீங்கள் உங்கள் அனுமதியுடன் அந்த AI-க்கு விவரங்களை வழங்கியிருந்தால், அது சட்டப்படி 'அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனை' (Authorized Transaction) என்றே கருதப்படும். ஒருவேளை அந்த AI தவறான பணப் பரிமாற்றத்தைச் செய்தால், அந்த நஷ்டத்திற்கு வங்கியிடம் இழப்பீடு கோர முடியாது.
வங்கி கணக்கு முடக்கப்படலாம்
உங்கள் வங்கிக் கணக்கில் வழக்கத்திற்கு மாறாகத் தேவையற்ற லாக்-இன் நடந்தால், வங்கியின் செக்யூரிட்டி சிஸ்டம் அதை 'Fraudalent Activity' என முத்திரை குத்தி, உங்கள் கணக்கை முடக்க வாய்ப்புள்ளது. எனவே, பாதுகாப்பான வங்கிச் சேவையைப் பெற வங்கியின் அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது.
இந்திய சந்தை நிலவரம்
இந்த கட்டுப்பாடு இந்தியாவிற்கும் பொருந்தும். Reserve Bank of India ஏற்கனவே டிஜிட்டல் சான்றுகளை (Digital Credentials) பாதுகாப்பாக வைத்திருக்குமாறு வங்கிகளை வலியுறுத்தி வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்தாலும், வங்கியின் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு நடப்பதே புத்திசாலித்தனம்.
