தங்கம் அடமானக் கடன் சந்தையில் முன்னணி நிறுவனங்களான Bajaj Finance மற்றும் Piramal Finance ஆகியவை கடன் திரும்பப் பெறுதலில் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
தங்கம் அடமானக் கடன் (Gold Loan) துறை கடந்த ஓராண்டாக அதிரடி வளர்ச்சியை கண்டு வந்த நிலையில், தற்போது முதல்முறையாகப் பெரிய அளவிலான சவால்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. கடன் வாங்கியவர்கள் உரிய நேரத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்தாததால், முன்னனி NBFC நிறுவனங்கள் தங்கள் கடன் வழங்கும் முறைகளை (Lending Standards) கடுமையாக்கியுள்ளன.
Bajaj Finance-ன் அதிரடி முடிவு
Bajaj Finance தனது ஷார்ட்-டர்ம் கோல்ட் லோன் தயாரிப்புகளை நிறுத்தியுள்ளது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில், 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கடன் கணக்குகள் (Stage 2 & Stage 3 assets) 15 பேசிஸ் பாயிண்டுகள் அதிகரித்துள்ளது. இது நிறுவனத்தின் லாபத்தை பாதிக்கும் என்பதால், மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
கடன் வாங்கியவர்களின் நிலை என்ன?
Piramal Finance தரவுகள் அதிர்ச்சிகரமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளன. அவர்களது வாடிக்கையாளர்களில் சுமார் 35% பேர் ஏற்கனவே பிற நிறுவனங்களிலும் கடன் பெற்றுள்ளனர். இது கடன் வாங்கியவர்களின் நிதி நிலைமை பலவீனமாக இருப்பதைக் காட்டுகிறது.
சந்தையின் தற்போதைய நிலை:
- வங்கிகளின் கோல்ட் லோன் வர்த்தகம் 83% உயர்ந்து, ஆகஸ்ட் 2026-ல் ₹5.6 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.
- NBFC நிறுவனங்களின் வர்த்தகம் 69% உயர்ந்து ₹3.6 டிரில்லியன் ஆக உள்ளது.
- நிதி சிக்கலில் இருப்பவர்களுக்கு ₹4.7 டிரில்லியன் வரை கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் Reserve Bank of India-வின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, இனி வரும் காலங்களில் வர்த்தக வளர்ச்சியை விட, அசட் குவாலிட்டியை (Asset Quality) பராமரிப்பதிலேயே நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
