வாடிக்கையாளர்களுக்கும் சூப்பர் செய்தி!
பொதுவான வாடிக்கையாளர்களுக்கு, 31-60 மாத கால டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 7.40% வட்டி வழங்கப்படும். இது 45 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பு ஆகும்.
மேலும், மற்ற சில டெனூர்களுக்கும் (tenures) 10 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. டெபாசிட் மெச்சூரிட்டி காலங்களிலும் (maturity slabs) மாற்றங்கள் செய்யப்பட்டு, டெபாசிட்டர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை (flexibility) வழங்கப்பட்டுள்ளது.
புதிய வட்டி விகிதங்கள் விவரம்:
பொது வாடிக்கையாளர்கள்:
- 12-17 மாதங்கள்: 6.60%
- 18-30 மாதங்கள்: 6.85%
- 31-60 மாதங்கள்: 7.40%
மூத்த குடிமக்கள்:
- 12-17 மாதங்கள்: 6.95%
- 18-30 மாதங்கள்: 7.20%
- 31-60 மாதங்கள்: 7.75%
முதலீட்டாளர் பாதுகாப்பு & இதர வசதிகள்
Bajaj Finance, FD-க்களில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர வட்டி செலுத்தும் வசதிகளை (cumulative/non-cumulative payout options) வழங்குகிறது. மேலும், FD-க்கு எதிராக கடன் பெறும் வசதியும் (loan-against-FD) உண்டு. இது முதலீட்டை உடைக்காமல் பணப்புழக்கத்தை (liquidity) உறுதி செய்கிறது.
இந்த ஃபிக்ஸட் டெபாசிட்கள் CRISIL மற்றும் ICRA அமைப்புகளால் AAA/Stable என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிதி கடமைகளை நிறைவேற்றும் வலுவான திறனைக் குறிக்கிறது. மார்ச் 2026 நிலவரப்படி, Bajaj Finance 119.33 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கும், சுமார் ₹5,10,000 கோடி சொத்துக்களையும் (AUM) நிர்வகித்து வருகிறது.
