BHIM ஆப் மூலம் இனி Tatkal NPS கணக்கை UPI மற்றும் வங்கி KYC உதவியுடன் உடனேயே தொடங்கலாம். PFRDA-வின் இந்த முயற்சி ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் எளிதாக்கும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தை (NPS) மக்கள் எளிதாக அணுகும் வகையில், NPCI தற்போது BHIM ஆப்பில் 'Tatkal NPS' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பேங்க் கிளைக்குச் செல்லாமலோ அல்லது காகித வேலைகள் இல்லாமலோ, வெறும் 3 படிகளில் ஓய்வூதிய கணக்கை நீங்கள் தொடங்கிவிடலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய குறைந்தபட்ச முதலீடு வெறும் ₹250 மட்டுமே.
எதற்காக இந்த மாற்றம்?
இந்தியாவில் ஓய்வூதிய திட்டங்களை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் PFRDA இந்த முயற்சியை எடுத்துள்ளது. வரும் 2 ஆண்டுகளில் சுமார் 2 கோடி முதல் 3 கோடி புதிய சந்தாதாரர்களை இணைப்பதே இவர்களின் இலக்கு. குறிப்பாக சிறிய நகரங்களில் உள்ளவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
எந்தெந்த வங்கிகள்?
தற்போது State Bank of India, HDFC Bank, ICICI Bank, Axis Bank, IndusInd Bank மற்றும் Bank of Baroda ஆகிய 6 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். விரைவில் மற்ற வங்கிகளும் இதில் இணைக்கப்பட உள்ளன.
கவனிக்க வேண்டியவை
இது சாதாரண சேமிப்புக் கணக்கு அல்லது FD கிடையாது. NPS என்பது சந்தை அபாயங்களுக்கு உட்பட்ட (Market-linked) ஒரு முதலீடு. எனவே, இதன் மதிப்பு அவ்வப்போது மாறக்கூடும். மேலும், இதிலிருந்து பணத்தை எடுப்பதற்கும், வெளியேறுவதற்கும் சில குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன. நீண்ட கால ஓய்வூதியத் திட்டத்திற்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், முதலீடு செய்வதற்கு முன் இந்த நிபந்தனைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.
