பெரிய நிதி திரட்டல்
Axis Finance Limited (AFL) கம்பெனி, Axis Bank-ன் முழுமையான துணை நிறுவனம் ஆகும். தற்போது, Axis Bank-டம் இருந்து ₹1,500 கோடி ரைட்ஸ் இஸ்யூ மூலமாகவும், புதிய முதலீட்டாளரான Kedaara Capital-டம் இருந்து ₹750 கோடி பிரெஃபரன்ஷியல் இஸ்யூ மூலமாகவும் இந்த நிதியைத் திரட்டியுள்ளது. இது AFL-ன் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் பெரிய பிரைமரி கேப்பிட்டல் ரைஸ் ஆகும். மேலும், Kedaara Capital இதன் முதல் வெளி முதலீட்டாளராக இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டது.
வளர்ச்சிக்கு என்ன பலன்?
இந்த நிதி வருகையால் Axis Finance-ன் கேப்பிட்டல் பேஸ் வலுப்பெறும். குறிப்பாக, Tier 1 கேப்பிட்டல் மற்றும் CRAR (Capital Adequacy Ratio) கணிசமாக உயரும். இந்த பணம், கம்பெனியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவைப்படும். இதன் மூலம் ரீடெய்ல், MSME மற்றும் ஹோல்சேல் பிரிவுகளில், செக்யூர்டு மற்றும் அன்செக்யூர்டு கடன் தயாரிப்புகளின் (Lending Products) மூலம் தனது சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
முதலீட்டாளர் நம்பிக்கை
Axis Bank MD & CEO Amitabh Chaudhry கூறுகையில், "Axis Finance-ஐ Axis Group-ன் ஒரு முக்கிய அங்கமாக வலுப்படுத்தும் நீண்டகால உறுதிப்பாட்டை இது காட்டுகிறது. Kedaara Capital-ஐ வரவேற்பதில் மகிழ்ச்சி" என்றார். Axis Finance MD & CEO Sai Giridhar, "இந்த நிதி, வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் சக்தியைக் கொடுக்கும். மேலும், எங்கள் ரிஸ்க் மேனேஜ்மென்ட் முறைகள் மிக உறுதியாக உள்ளன" என்று தெரிவித்தார். Kedaara Capital Founder Sunish Sharma, "Axis Finance-ன் பரந்த மற்றும் பல்வகைப்பட்ட செயல்பாடுகள், இந்தியாவின் கடன் சந்தை வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள சிறந்த நிலையில் உள்ளது" என்று குறிப்பிட்டார்.
