உற்பத்தி செலவுகள் அதிகரிப்பால் SML Mahindra நிறுவனத்தின் EBITDA மார்ஜின் **10.5%** ஆக சரிந்துள்ளது. இருப்பினும், விலை உயர்வு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் மூலம் Q4FY27-க்குள் லாபத்தை மீட்டெடுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
லாப சரிவிற்கு என்ன காரணம்?
நிறுவனம் ஜூன் 30, 2026-ல் முடிந்த காலாண்டில் ₹958 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 13.2% வளர்ச்சி என்றாலும், ரா மெட்டீரியல் விலை 5-6% வரை உயர்ந்ததால் லாபம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு 12.4% ஆக இருந்த EBITDA மார்ஜின், இந்த முறை 10.5% ஆக குறைந்துள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூலையில் 5% வரை விலையை உயர்த்தியிருந்தாலும், அதன் பலன் முழுமையாக கிடைக்க இன்னும் சில காலம் ஆகும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகாத்ரா & மஹிந்திரா இணைப்பு
மிக முக்கியமான மாற்றமாக, Mahindra & Mahindra-வின் டிரக் மற்றும் பஸ் பிரிவை ₹525 கோடி மதிப்பீட்டில் SML Mahindra இணைக்க உள்ளது. ஜனவரி 2027-க்குள் இந்த ஒருங்கிணைப்பு நிறைவடையும். இதன் மூலம், 2031-ஆம் நிதியாண்டிற்குள் ₹12,500 கோடி வருவாயை எட்டவும், சந்தை பங்கினை (Market Share) 10-12% ஆக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களின் வருகை
பாரம்பரிய வாகனங்கள் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகனத் துறையிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பள்ளி மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் பஸ்கள் Q4FY27 அல்லது அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
தற்போது SML Mahindra ஷேர் விலை சுமார் ₹6,343-ல் வர்த்தகமாகி வருகிறது. மூலப்பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் மற்றும் இந்த நிறுவன ஒருங்கிணைப்பு எவ்வளவு வெற்றிகரமாக அமைகிறது என்பதை பொறுத்தே பங்கின் எதிர்காலம் அமையும்.
