டிராக்டர் விற்பனை அதிரடி!
மஹிந்திரா & மஹிந்திராவின் ஃபார்ம் எக்யூப்மென்ட் பிசினஸ் பிரிவு இந்த முறை சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 48,411 டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 21% அதிகம். இந்த முறை சித்ரா நவராத்திரி பண்டிகை ஏப்ரலில் இல்லாதபோதும் இந்த வளர்ச்சி சாத்தியமானது என ஃபார்ம் எக்யூப்மென்ட் பிசினஸ் பிரசிடென்ட் வீஜே நக்ரா தெரிவித்துள்ளார். மேலும், டிராக்டர் ஏற்றுமதியும் 30% உயர்ந்து 2,007 யூனிட்களை எட்டியுள்ளது.
பயணிகள் வாகனங்களும் கலக்கல்!
ஆட்டோமோட்டிவ் டிவிஷனும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 8% அதிகரித்து 56,331 யூனிட்களாக உயர்ந்துள்ளது. மேலும், உள்நாட்டு சந்தையில் 23,427 கமர்ஷியல் வாகனங்களையும் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. புதிய நிதியாண்டான 2026-27 ஐ ஏப்ரல் மாதத்தில் ஒரு பாசிட்டிவான குறிப்புடன் தொடங்கியுள்ளோம் என ஆட்டோமோட்டிவ் டிவிஷன் CEO நளினிகாந்த் கோல்லகுண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
