ஜனவரி 2026: ஆட்டோ துறைக்கு ஒரு பொற்காலம்!
புதிய ஆண்டின் தொடக்கத்திலேயே இந்திய ஆட்டோமொபைல் துறை தனது வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஜனவரி 2026-ல் உள்நாட்டு விற்பனை (Domestic Wholesales) மற்றும் ஏற்றுமதி (Exports) என இரண்டிலும் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மானுஃபாக்சரர்ஸ் (SIAM) வெளியிட்டுள்ள தகவலின்படி, passenger vehicle பிரிவில் மட்டும் 4,49,616 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.6% அதிகம். ஒட்டுமொத்தமாக, டீலர்களுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 23.5% உயர்ந்து 24,50,944 யூனிட்களை எட்டியுள்ளது. மேலும், Federation of Automobile Dealers Associations (FADA) கணக்கீட்டின்படி, ரீடெய்ல் விற்பனை 17.61% உயர்ந்து 27,22,558 யூனிட்களாக பதிவாகியுள்ளது.
இந்த மாபெரும் வளர்ச்சிக்கு முக்கிய காரணம், செப்டம்பர் 2025-ல் செய்யப்பட்ட GST வரி குறைப்பு. இதனால் வாகனங்கள் வாங்கும் செலவு குறைந்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் வாங்க எளிதாகியுள்ளது. அதோடு, யூனியன் பட்ஜெட் 2026-ல் வாகன உற்பத்தி மற்றும் எலக்ட்ரிக் வாகன (EV) துறைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், புதிய ஊக்கத்தை அளித்துள்ளது. SIAM டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் மேனன், பட்ஜெட்டின் சலுகைகள் இந்த துறைக்கு நீண்டகால நன்மைகளைத் தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முக்கிய கம்பெனிகளின் அசத்தல் செயல்பாடு
ஜனவரி 2026-ல் முன்னணி ஆட்டோமொபைல் கம்பெனிகளும் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன. மாருதி சுசுகி (Maruti Suzuki) தனது வரலாற்றிலேயே மிக அதிகமான மாத விற்பனையை பதிவு செய்துள்ளது. மொத்தமாக 2,36,963 யூனிட்கள் விற்பனையாகி, 11.6% வளர்ச்சி கண்டுள்ளது. ஏற்றுமதியிலும் 51,020 யூனிட்களுடன் சாதனை படைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தனது சிறந்த மாத விற்பனையை சந்தித்தது. மொத்தம் 71,066 யூனிட்கள் விற்பனையாகி, 47.1% வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, Tata Nexon மற்றும் Punch கார்கள், அத்துடன் Electric Vehicle (EV) விற்பனையும் சிறப்பாக இருந்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) மொத்தமாக 1,04,309 வாகனங்களை விற்பனை செய்து, 24% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் SUV விற்பனை மட்டும் 25% அதிகரித்து 63,510 யூனிட்களாக உள்ளது. புதிதாக அறிமுகமான XUV 7XO மாடலுக்கு கிடைத்த அமோக வரவேற்பு இதற்கு முக்கிய காரணம்.
பல்வேறு வாகனப் பிரிவுகளின் செயல்பாடு
இரண்டு சக்கர வாகனப் (Two-Wheeler) பிரிவு ரீடெய்ல் விற்பனையில் 20.82% வளர்ச்சியைப் பெற்று, 18,52,870 யூனிட்களை எட்டியுள்ளது. கிராமப்புறங்களில் நிலவும் தேவை மற்றும் நகர்ப்புறங்களில் காணப்படும் மீட்சி இதற்கு வலு சேர்த்துள்ளது. டிராக்டர் விற்பனையும் 22.89% உயர்ந்து, விவசாயத் துறையின் ஆரோக்கியமான நிலையை காட்டுகிறது. மூன்று சக்கர வாகனங்கள் (Three-wheelers) 18.80% மற்றும் வணிக வாகனங்கள் (Commercial Vehicles) 15.07% வளர்ச்சி கண்டுள்ளன. இது போக்குவரத்து மற்றும் சரக்கு துறைகளில் பரவலான மீட்சியை சுட்டிக்காட்டுகிறது.
EV, SUV கார்களின் வளர்ச்சி மற்றும் அரசின் திட்டங்கள்
SUV கார்களின் மீதான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.passenger vehicle விற்பனையில் SUV-களின் பங்கு 60%-க்கு மேல் உள்ளது. அதே சமயம், எலக்ட்ரிக் வாகனப் (EV) புழக்கமும் வேகமாக அதிகரித்து வருகிறது. passenger vehicle பிரிவில் EV-களின் பங்கு 12-18% வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு, லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி சலுகைகளை 2028 வரை நீட்டித்துள்ளது. மேலும், EV உதிரிபாகங்கள் உற்பத்திக்கு தேவையான கனிமப் பகுதிகளை (Rare-earth mineral corridors) உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இவை உள்ளூரில் தயாரிக்கப்படும் EV-களின் விலையைக் குறைத்து, போட்டித்தன்மையை அதிகரிக்கும்.
இந்தியாவின் GDP வளர்ச்சி 7%-க்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவது, விவசாய வருமானம் அதிகரிப்பது போன்ற காரணங்களும் இந்த வாகன விற்பனைக்கு நல்ல ஆதரவை வழங்குகின்றன.
சவால்களும் எதிர்காலமும்
இந்த சாதகமான சூழலுக்கு மத்தியிலும் சில சவால்களும் உள்ளன. GST சலுகைகள் மற்றும் பட்ஜெட் ஊக்கங்கள் இல்லையென்றால், இந்த வளர்ச்சி தொடருமா என்ற கேள்வி உள்ளது. உலக சந்தையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம் போன்றவை கம்பெனிகளின் லாப வரம்பைக் குறைக்கலாம். செமிகண்டக்டர் மற்றும் முக்கிய கனிமங்களுக்கான விநியோகச் சங்கிலி (Supply chain) சிக்கல்களும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளன.
சந்தைப் போட்டி தீவிரமடைந்து வருகிறது. புதிய மாடல்கள் அறிமுகம், உற்பத்தித் திறனை அதிகரிப்பது போன்றவற்றால் தள்ளுபடிகள் மற்றும் லாப அழுத்தங்கள் அதிகரிக்கலாம். இருப்பினும், அரசின் தொடர்ச்சியான கொள்கை ஆதரவு, SUV மற்றும் EV மீதான மக்களின் விருப்பம், வலுவான உள்நாட்டு நுகர்வு ஆகியவை இந்திய ஆட்டோமொபைல் துறை 2026-ல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
