தென்னமெரிக்காவில் அதிகரித்து வரும் தனிநபர் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், Hero MotoCorp ஈக்வடாரில் தனது விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய டூ-வீலர் தயாரிப்பாளரான இந்நிறுவனம், உள்ளூர் டிஸ்ட்ரிபியூட்டர் நிறுவனமான Quilmotors உடன் இணைந்து, அசெம்பிளி, விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
Guayaquil ஷோரூம் துவக்கம்
இந்நிறுவனம், ஈக்வடாரின் முக்கிய ஆட்டோமொபைல் மையமான Guayaquil நகரில் தனது முதல் பிரத்யேக ஷோரூமை திறந்துள்ளது. இங்கு விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது.
மாடல்கள் தேர்வு
Hero MotoCorp, ஈக்வடாரின் சாலை மற்றும் நிலப்பரப்புக்கு ஏற்ற வகையில் மொத்தம் எட்டு வகையான மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் தினசரி பயன்பாட்டிற்கான கம்யூட்டர் பைக்குகள், சக்திவாய்ந்த ஸ்டிரீட் பைக்குகள், ஆஃப்-ரோடு அட்வென்ச்சர் மாடல்கள் மற்றும் நகர்ப்புற ஸ்கூட்டர்கள் ஆகியவை அடங்கும். Eco சீரிஸ் கம்யூட்டர் பைக்குகள் முதல் Xpulse 200 4V மற்றும் Xoom ஸ்கூட்டர் வரை பலதரப்பட்ட விருப்பங்கள் ஈக்வடார் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவர்ச்சிகரமான வாரண்டி
Hero MotoCorp-ன் முக்கிய ஈர்ப்பு, ஈக்வடாரில் வழங்கப்படும் 5 வருடங்கள் அல்லது 60,000 கிலோமீட்டர் வரையிலான விரிவான வாரண்டி ஆகும். சந்தையில் இதுவே மிகச்சிறந்த வாரண்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. Quilmotors-ன் விரிவடைந்து வரும் சர்வீஸ் நெட்வொர்க்குடன் இந்த வாரண்டி இணைவது, வாடிக்கையாளர் நம்பிக்கையை அதிகரிக்கும்.
எதிர்கால விரிவாக்க திட்டங்கள்
Guayaquil-க்கு பிறகு, Quito மற்றும் Manta போன்ற முக்கிய நகரங்களிலும், Manabi மாகாணத்திலும் தனது இருப்பை விரிவுபடுத்த Hero MotoCorp திட்டமிட்டுள்ளது. இது நாடு முழுவதும் விநியோகத்தையும், எளிதான அணுகலையும் அதிகரிக்கும். Honda-வுடனான கூட்டணியை முறித்த பிறகு, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நீண்டகால சர்வதேச திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விரிவாக்கம் அமைந்துள்ளது.
