ராயல் என்ஃபீல்ட் உற்பத்தி விரிவாக்கம்: புதிய ஆலை அறிவிப்பு!
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், தனது உற்பத்தி திறனை கணிசமாக அதிகரிக்க உள்ளது. Eicher Motors Ltd-ன் துணை நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், ₹2,500 கோடி (சுமார் $300 மில்லியன்) முதலீட்டில் புதிய பசுமை உற்பத்தி ஆலையை (Greenfield Manufacturing Facility) அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஆலை ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள Tada-வில் அமையவுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் பைக்குகளுக்கான அதீத சந்தை தேவை காரணமாக இந்த விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போதுள்ள தொழிற்சாலைகள் கிட்டத்தட்ட முழு கொள்ளளவில் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் 14.6 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்கின்றன. 2025-26 நிதியாண்டில் 12 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகள் விற்பனையாகியுள்ளது. இந்த தேவையை சமாளிக்க புதிய ஆலை அவசியம்.
நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த புதிய ஆலை படிப்படியாக சந்தை தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும். இதன் மூலம், ஆண்டிற்கு 20 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகளை உற்பத்தி செய்யும் திறன் கிடைக்கும். இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டின் செய்யாறு ஆலை விரிவாக்கத்திற்கும் வலு சேர்க்கும். Eicher Motors MD மற்றும் ராயல் என்ஃபீல்ட் CEO ஆன B Govindarajan கூறுகையில், ஆந்திரப் பிரதேச ஆலை...
