வெளியே இருந்து வரும் சமையல் எண்ணெய் தேவையை குறைக்க West Bengal அரசு தனது சொந்த Mustard Oil பிராண்டை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. உருளைக்கிழங்கு விவசாயத்திற்குப் பதிலாக எண்ணெய் வித்துக்கள் சாகுபடியை அதிகரிக்கவும், இதற்காக National Dairy Development Board-ன் உதவியைப் பெறவும் அரசு முடிவு செய்துள்ளது.
மேற்கு வங்க அரசு, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து வரும் சமையல் எண்ணெய் மீதான சார்பைக் குறைக்க, சொந்தமாக கடுகு எண்ணெய் பிராண்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 'Banglar Dairy' திட்டத்தைப் போலவே இதையும் செயல்படுத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் அசோக் கிர்தானியா (Ashok Kirtania) உறுதிப்படுத்தியுள்ளார்.
விவசாயத்தில் ஒரு மாற்றம்
இந்த ஆண்டு மாநிலத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தி 25 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது, இது விலை வீழ்ச்சிக்குக் காரணமாகிறது. இதை ஈடுகட்ட, விவசாயிகள் உருளைக்கிழங்கிற்குப் பதிலாக கடுகு, நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி சாகுபடியை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். தொழில்நுட்ப உதவிகளுக்காக National Dairy Development Board-உடன் கைகோர்த்துள்ளது மாநில அரசு.
தொழில்நுட்ப கூட்டணி
நீண்ட கால வெற்றிக்கு, IIT Kharagpur-உடன் இணைந்து மேம்பட்ட எண்ணெய் எடுக்கும் முறைகள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை குறித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது. தற்போது கிழக்கு பர்தமான் மற்றும் முர்ஷிதாபாத் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 525 ஏக்கர் பரப்பளவில் முன்னோடித் திட்டம் (Pilot Program) நடந்து வருகிறது.
மார்க்கெட் சவால்
இந்தியாவின் எடிபிள் ஆயில் மார்க்கெட்டில் Adani Wilmar, Marico மற்றும் Emami Agrotech போன்ற பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவ்வளவு பெரிய விநியோக வலையமைப்பைக் கொண்ட தனியார் நிறுவனங்களை, அரசு நிறுவனம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே சந்தை நிபுணர்களின் கேள்வியாக உள்ளது. லாப வரம்புகள் மற்றும் விநியோகச் சங்கிலியை நிர்வகிப்பதுதான் அரசுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.
