சரக்கு விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, சரக்கு விநியோகச் சங்கிலியில் (supply chain) ஏற்பட்ட பாதிப்புகள், இந்த புதிய முயற்சியின் அவசியத்தை உணர்த்தியுள்ளன. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஏற்படும் தடங்கல்களால், இந்தியாவில் யூரியா மற்றும் பிற உரங்களின் உற்பத்தி 10% முதல் 15% வரை குறையக்கூடும் என க்ரிசில் ரேட்டிங்ஸ் (Crisil Ratings) கணித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு உரத் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயு விநியோகத்தை உறுதி செய்துள்ளது.
மானியச் சுமை மற்றும் அரசின் நடவடிக்கைகள்
இந்தியாவில் யூரியா பயன்பாடு அதிகமாக இருந்தாலும், இறக்குமதியை சார்ந்தே உள்ளோம். FY26-க்கு மட்டும் யூரியா மானியத்திற்காகவே (subsidy) ₹1.26 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விநியோகத் தட்டுப்பாடுகளை சமாளிக்க, நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கான உர இருப்பு (inventory) உள்ளது. மாற்று வழிகள் மூலமாகவும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அரசின் முக்கியக் குழுக்கள், உற்பத்தி குறையாமல் இருப்பதை உறுதி செய்யவும், வெளிநாட்டு விநியோகத்தை ஒருங்கிணைக்கவும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
உற்பத்தி சரிவைத் தடுக்கும் முயற்சிகள்
மேலும், மாநில அரசுகளுக்கு, தினசரி கண்காணிப்பு, திடீர் சோதனைகள், கருப்புச் சந்தை மற்றும் பதுக்கலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் சரியான நேரத்தில் உரங்களைப் பெறுவதை அரசு உறுதி செய்யும்.