அமெரிக்காவின் ராணுவ ஆதரவு!
அமெரிக்க வெளியுறவுத்துறை, இந்தியாவின் ராணுவத் தேவைகளுக்காக ஒரு முக்கிய வெளிநாட்டு ராணுவ விற்பனைக்கு (Foreign Military Sale) அனுமதி அளித்துள்ளது. இதன் கீழ், இந்தியாவின் AH-64E Apache தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் M777A2 அல்ட்ரா-லைட் Howitzers-க்கான ஆதரவு சேவைகள் வழங்கப்பட உள்ளன.
Apache ஹெலிகாப்டர்களுக்கான ஆதரவு $198.2 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், M777 Howitzers-க்கான திட்டம் $230 மில்லியன் டாலர்கள் ஆகும். மொத்தமாக இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் சுமார் $428 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
மூலோபாய உறவு வலுக்கிறது
இந்த ஒப்புதல், அமெரிக்கா-இந்தியா மூலோபாய உறவு மேலும் வலுப்படுவதைக் காட்டுகிறது. இதன் மூலம், இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் அதிகரிக்கும் என்றும், உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
யார் யார் ஒப்பந்ததாரர்கள்?
Apache ஹெலிகாப்டர் ஆதரவு சேவைகளுக்கு Boeing Company மற்றும் Lockheed Martin முக்கியப் பங்கு வகிக்கும். M777 Howitzers-க்கு, இங்கிலாந்தைச் சேர்ந்த BAE Systems முதன்மை ஒப்பந்ததாரராக இருக்கும். இந்த சேவைகளில் இன்ஜினியரிங், தொழில்நுட்ப, மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆதரவு, பணியாளர் பயிற்சி, தொழில்நுட்ப தரவுகள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவை அடங்கும்.
பிராந்திய ஸ்திரத்தன்மை
இந்த விற்பனை பிராந்தியத்தில் ராணுவ சமநிலையைப் பாதிக்காது என்றும், அமெரிக்காவின் தயார்நிலையிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தோ-பசிபிக் மற்றும் தெற்கு ஆசியாவில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் இது பங்களிக்கும் என அமெரிக்க அரசு நம்புகிறது. இந்த ஒப்பந்தம் Foreign Military Sale (FMS) framework-ன் கீழ் வருகிறது.