இந்திய கடற்படைக்காக மேம்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை உருவாக்க BrahMos Aerospace நிறுவனத்திற்கு ₹661.50 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம், BrahMos Aerospace நிறுவனத்துடன் ₹661.50 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் கப்பற்படையில் உள்ள போர் கப்பல்களுக்குத் தேவையான நவீன 'Fire Control Systems' மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த அமைப்புகள், கப்பலில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணைகளை மிகத் துல்லியமாக இலக்கை நோக்கி ஏவுவதற்கு மிக முக்கியமானது.
'Buy (Indian-IDDM)' என்றால் என்ன?
இந்த ஒப்பந்தம் 'Buy (Indian-IDDM)' - அதாவது Indigenously Designed, Developed, and Manufactured என்ற பிரிவின் கீழ் வருகிறது. இதன் முக்கிய நிபந்தனை என்னவென்றால், இதில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களில் குறைந்தது 68% இந்தியாவிலேயே தயாரிக்கப்பட வேண்டும். இது வெளிநாட்டு தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதை குறைத்து, இந்தியாவை பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடையச் செய்வதே அரசின் முக்கிய நோக்கம்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!
BrahMos Aerospace என்பது DRDO மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyenia ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு ஜாயிண்ட் வென்ச்சர். இது ஒரு அன்லிஸ்டட் (Unlisted) நிறுவனம் என்பதால், நேரடியாக இதில் முதலீடு செய்ய முடியாது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் தாக்கம் பாதுகாப்புத் துறை சார்ந்த மற்ற பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்குப் பெரும் சாதகமாக அமையும்.
இந்த ஒப்பந்தம் உள்நாட்டு தயாரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், சப்ளை செயினில் உள்ள நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பாதுகாப்புத் துறை திட்டங்கள் நீண்ட கால அடிப்படையில் செயல்படக்கூடியவை என்பதால், அந்த நிறுவனங்கள் சரியான நேரத்தில் ஆர்டர்களை முடித்து டெலிவரி செய்வதே அவற்றின் நிதி ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
