இந்தியாவின் ராணுவ கட்டமைப்பை (Defence Infrastructure) நவீனப்படுத்த Ministry of Defence புதிய முயற்சியை எடுத்துள்ளது. இதற்காக India AI Mission உடன் இணைந்து சொந்தமாக AI தளத்தை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு தொழில்நுட்பங்களின் மீதான சார்பு குறையும், அதே சமயம் உள்நாட்டு டெக் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்.
என்ன இந்த புதிய திட்டம்?
இந்திய ராணுவத்தின் மிக முக்கியமான இலக்குகளை அடையாளம் காணுதல் மற்றும் ஆயுதங்களை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளுக்கு வெளிநாட்டு மென்பொருட்களை நம்பியிருப்பது ஆபத்தானது என அரசு கருதுகிறது. குறிப்பாக, வெளிநாட்டு சாப்ட்வேர்களில் இருக்கும் ரகசிய 'Backdoors' அல்லது ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் வாய்ப்புகளை தவிர்க்க, சொந்தமாக Sovereign AI அடுக்கை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.
டிஃபென்ஸ் நிறுவனங்களுக்கு என்ன லாபம்?
இந்த மாற்றம், இந்திய டிஃபென்ஸ் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும். ராணுவத்தின் 'Sensor-to-Shooter' திறனை மேம்படுத்த, உள்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் சாப்ட்வேர், ஹார்டுவேர் மற்றும் டேட்டா இன்டகிரேஷன் சேவைகளுக்கு அதிக தேவை ஏற்படும். இது அரசின் 'Make in India' திட்டத்தின் கீழ், குறைந்தது 50% உள்ளூர் தயாரிப்பு என்ற இலக்கை நோக்கி செல்லும்.
சர்வதேச சந்தையில் இந்தியா
தற்போது, ReArm Europe முன்முயற்சியின் கீழ், இந்தியா 155-mm பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் ஏவியோனிக்ஸ் பாகங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இனி வரும் காலங்களில், 'Integrated Theatre Commands' எனப்படும் முப்படை ஒருங்கிணைப்பு செயல்பாடுகளுக்கு டிஜிட்டல் உள்கட்டமைப்பு மிகவும் அவசியம் என்பதால், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சிமுலேஷன் துறையில் உள்ள நிறுவனங்கள் வளர்ச்சி காண வாய்ப்புள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு...
ராணுவ தரத்திலான AI-ஐ உருவாக்குவது எளிதான காரியம் அல்ல. சிக்கலான தொழில்நுட்பம் மற்றும் நீண்ட கால மூலதன முதலீடு தேவைப்படும் இந்தத் திட்டங்களில், தனியார் நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே வெற்றி அமையும். எனவே, அரசு வெளியிடும் டெண்டர்கள் மற்றும் தொழில்நுட்ப தேவைகளை கவனித்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.
