Boeing நிறுவனத்தின் 737 MAX விமானங்களில் லேண்டிங் நேவிகேஷன் பகுதியில் சிறிய மென்பொருள் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. இது ஆபத்தானதல்ல என்று நிறுவனம் கூறினாலும், இது விமான போக்குவரத்து செலவுகளை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Boeing நிறுவனத்தின் 737 MAX ரக விமானங்களில் லேண்டிங் நேவிகேஷன் சிஸ்டத்தில் மென்பொருள் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, விமானம் தரை இறங்கும் இறுதி கட்டத்தில் இந்த தானியங்கி அமைப்பில் சில கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த தகவல் ஏர்லைன் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
Boeing நிறுவனம் இந்த கோளாறு மிகச்சிறியது (non-critical) என்று தெரிவித்தாலும், விமான போக்குவரத்துத் துறையில் இது மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே கடந்த காலங்களில் 737 MAX ரக விமானங்கள் நீண்ட காலம் தரையிறக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டிருப்பதால், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த மென்பொருள் சிக்கல் மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ளது.
ரெகுலேட்டர்களின் தலையீடு இருக்குமா?
இந்த விவகாரத்தில் FAA (Federal Aviation Administration) மற்றும் இந்தியாவின் DGCA போன்ற அமைப்புகளின் பார்வை விழுந்தால், கூடுதல் கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக, அகசா ஏர் (Akasa Air) மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) போன்ற நிறுவனங்கள் இந்த விமானங்களை அதிகமாக பயன்படுத்துவதால், அவர்கள் இந்த மென்பொருள் அப்டேட்கள் அல்லது கூடுதல் பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
இந்த சிக்கலை சரிசெய்ய கட்டாய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால், பராமரிப்பு செலவுகள் (Maintenance Costs) மற்றும் விமான செயல்பாட்டு நேரம் (Operational Downtime) பாதிக்கப்படலாம். நிறுவனத்தின் டெலிவரி வேகத்தை இது பாதிக்குமா என்பதுதான் தற்போதைய சந்தையின் முக்கிய கேள்வி. இனி வரும் நாட்களில் ரெகுலேட்டர்கள் எடுக்கப்போகும் முடிவே இந்த பங்கின் போக்கை தீர்மானிக்கும்.
