Mafatlal Industries நிறுவனம் Air Force Wives Welfare Association-உடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை (MoU) மேற்கொண்டுள்ளது. இதன்படி, இந்திய விமானப் படையின் தரம் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் போர் காலச் சீருடைக்கான துணிகளை இந்நிறுவனம் வழங்கவுள்ளது.
ராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் Mafatlal
புது தில்லியில் உள்ள விமானப்படை தளத்துடன் இணைக்கப்பட்ட Air Force Wives Welfare Association (Local) உடன் Mafatlal Industries தற்போது கைக்கோர்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய விமானப் படை நிர்ணயித்துள்ள துல்லியமான அளவு, நிறம் மற்றும் தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட போர் காலச் சீருடை துணிகளை இந்நிறுவனம் தயாரித்து வழங்கும்.
இந்த ஒப்பந்தம் ஏன் முக்கியமானது?
நிறுவனங்களின் சீருடைத் தேவைகளை (Institutional Uniforms) பூர்த்தி செய்வதில் Mafatlal தனது கவனத்தை தீவிரமாகத் திருப்பியுள்ளது. ஏற்கனவே பள்ளி, கார்ப்பரேட் மற்றும் சுகாதாரத் துறைக்குச் சீருடைகளை வழங்கி வரும் நிலையில், தற்போது பாதுகாப்புத் துறை தொடர்பான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது, நிறுவனத்தின் தயாரிப்புத் திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
இந்த ஒப்பந்தம் நிறுவனத்தின் வருவாய்க்கு எந்த அளவுக்குப் பங்களிக்கப் போகிறது என்பது வரும் நாட்களில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஜவுளித் துறை மட்டுமின்றி, Health & Hygiene மற்றும் Digital Infrastructure போன்ற பல்வேறு துறைகளிலும் கால்பதித்துள்ள Mafatlal Industries, இந்த புதிய டிஃபென்ஸ் ஒப்பந்தத்தின் மூலம் தனது சந்தைப் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. தற்காப்புத் துறை சார்ந்த அடுத்தடுத்த வாய்ப்புகளை இந்நிறுவனம் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
