TCS தரப்பில் விளக்கம்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், ராயல் பேங்க் ஆஃப் கனடா (RBC) உடனான முக்கிய டெக்னாலஜி ஒப்பந்தத்தை இழந்துவிட்டதாகவும், சுமார் 150 ஊழியர்கள் வேறு பணிக்கு மாற்றப்பட உள்ளதாகவும் வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது. Moneycontrol.com இணையதளத்தில் வெளியான இந்த செய்திகள் 'முற்றிலும் பொய், துல்லியமற்றவை, எந்தவித உண்மையும் அற்றவை' என TCS தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செய்திக்கு முன்பே தகவல்?
இந்த தவறான தகவல் குறித்து, செய்தி வெளியிடுவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட செய்தித் தளத்திற்கு TCS நிர்வாகம் தெரிவித்ததாகவும், ஆனாலும் பெயரிடப்படாத ஆதாரங்களை வைத்து செய்தி வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. .
RBC உடனான உறவு
TCS நிறுவனம் RBC உடனான தனது நீண்டகால மற்றும் மதிப்புமிக்க உறவை வலியுறுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக இந்த வணிக உறவை TCS வளர்த்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த விளக்கத்தால், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தக்கவைக்கவும், நற்பெயருக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கவும் TCS முயல்கிறது.
