TV Vision Ltd தனது கார்ப்பரேட் திவால் நடவடிக்கையின் ஒரு பகுதியாக (CIRP), நிறுவனத்தை மீட்டெடுப்பதற்கான புதிய முதலீட்டாளர்களைத் தேடி 'Form G' அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கிய TV Vision Ltd
நிறுவனத்தின் நிதி நிலைமை கடந்த சில ஆண்டுகளில் மிக மோசமாக உள்ளது. கடந்த நிதியாண்டில் ₹53.24 கோடி ஆக இருந்த வருவாய், இந்த நிதியாண்டில் (2025-26) வெறும் ₹14.15 கோடி ஆகக் குறைந்துள்ளது. இந்த சரிவே நிறுவனம் தற்போது திவால் நடவடிக்கை (CIRP) நோக்கிச் செல்ல முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
முக்கியமான காலக்கெடு (Key Dates)
தற்போது இந்த செயல்முறை Resolution Professional (RP) அலோக் குமார் முரர்கா (Alok Kumar Murarka) மேற்பார்வையில் நடைபெறுகிறது. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான தேதிகள் இவை:
- அக்டோபர் 13, 2026: ஆர்வம் தெரிவிப்பதற்கான (EOI) கடைசி தேதி.
- அக்டோபர் 19, 2026: தற்காலிக விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியீடு.
- நவம்பர் 3, 2026: இறுதி விண்ணப்பதாரர்கள் பட்டியல்.
- டிசம்பர் 12, 2026: ரிசல்யூஷன் பிளான் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்.
பங்குதாரர்கள் கவனத்திற்கு
இந்த சட்ட நடவடிக்கையின் கீழ், தற்போதைய போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் (Board of Directors) நிர்வாகம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. முழு அதிகாரமும் Resolution Professional வசம் உள்ளது. கமிட்டி ஆஃப் கிரெடிட்டார்ஸ் (Committee of Creditors) மற்றும் நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகே நிறுவனத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
