சர்வதேச சந்தையில் கால்தடம் பதிக்கும் முயற்சியில் John Cockerill India நிறுவனம் வெற்றி கண்டுள்ளது. தான்சானியாவைச் சேர்ந்த A1 Iron & Steel நிறுவனத்திடமிருந்து சுமார் **₹200 கோடி** மதிப்பிலான பெரிய ஒப்பந்தத்தை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
என்ன திட்டம்?
தான்சானியாவின் டொடோமா நகரில் உள்ள Nala Industrial Park-ல் அமையவுள்ள ஸ்டீல் தொழிற்சாலைக்காக, மிக முக்கியமான இயந்திரங்களை வழங்க John Cockerill India ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் ₹200 கோடி ஆகும்.
என்னென்ன உபகரணங்கள்?
நிறுவனம் வழங்கப்போகும் முக்கிய இயந்திரங்கள்:
- Push Pull Pickling Line
- 6-Hi Single Stand Reversible Cold Rolling Mill
- Continuous Galvanizing Line
- Acid Regeneration Plant
இந்த இயந்திரங்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் நிறுவுதல் தொடர்பான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் ஜான் காக்கரில் நிறுவனம் வழங்கும்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்தத் திட்டத்தின் வேலைகள் 2026 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது. அடுத்த 10 மாதங்களுக்குள் இதை முடித்துக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முற்றிலும் ஒரு வணிக ரீதியிலான ஒப்பந்தம் என்றும், இதில் நிறுவனத்தின் புரமோட்டர்களுக்கு எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரிப்பது பங்குதாரர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் லாபகரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
