அமெரிக்க FDA-வின் அங்கீகாரம்!
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான Lupin Limited, தற்போது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (US FDA) இருந்து ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் தயாரித்த, குடல் பரிசோதனைக்கு (Colonoscopy) பயன்படுத்தப்படும்generic சோடியம் சல்பேட், மெக்னீசியம் சல்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு மாத்திரைகளுக்கு (Sodium Sulfate, Magnesium Sulfate, and Potassium Chloride Tablets) அமெரிக்க FDA ஒப்புதல் அளித்துள்ளது.
சந்தையில் 180 நாள் தனி உரிமை!
இந்த ஒப்புதலுடன் சேர்த்து, Lupin Limited-க்கு ஒரு பெரிய சாதகமும் கிடைத்துள்ளது. அதாவது, இந்த குறிப்பிட்ட மருந்தை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் 180 நாட்களுக்கு தனி உரிமை (180-day exclusive first-to-file status) கிடைத்துள்ளது. இந்த மருந்து சந்தையின் மதிப்பு மட்டும் சுமார் $132 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக உரிமை, Lupin நிறுவனத்திற்கு சந்தையில் ஒரு வலுவான இடத்தை பிடிக்க உதவும்.
