Patanjali Foods நிறுவனம் தனது FY26 நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ரெவென்யூ **19%** அதிகரித்து **₹40,169 கோடி**யாக உயர்ந்துள்ள நிலையில், நெட் ப்ராஃபிட் **39.5%** வளர்ச்சி கண்டு **₹1,814.87 கோடி**யாகப் பதிவாகியுள்ளது.
வலுவான வளர்ச்சிக்கு என்ன காரணம்?
இந்த நிதியாண்டு, நிறுவனத்தின் 'Home and Personal Care' (HPC) பிரிவை முழுமையாக இணைத்த முதல் ஆண்டாகும். இதன் மூலம் FMCG பிரிவு மட்டும் ₹11,188.25 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் மொத்த EBITDA பங்களிப்பில் இது 61%-க்கு மேல் உள்ளது, இது அதிக லாபம் தரக்கூடிய தயாரிப்புகளுக்கு நிறுவனம் மாறியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.
முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட்
இந்த சூப்பர் ரிசல்ட்டைத் தொடர்ந்து, பங்குதாரர்களுக்கு ஒரு ஷேருக்கு ₹5 டிவிடெண்ட் வழங்க நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
ஆயில் பாம் திட்டத்தின் இலக்கு
எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், நிறுவனம் தனது ஆயில் பாம் பிளாண்டேஷன் (Oil Palm Plantation) திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது 1,10,722 ஹெக்டேர் நிலப்பரப்பில் 80,579 விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் நிறுவனம், 2032-ஆம் ஆண்டிற்குள் இதை 5 லட்சம் ஹெக்டேர் ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
நிர்வாக மாற்றங்கள்
நிறுவனத்தின் ஆடிட்டிங் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. M/s. Chaturvedi & Shah LLP வெளியேறிய நிலையில், M/s. Walker Chandiok & Co. LLP நிறுவனத்தின் தணிக்கையராகத் தொடர்கிறது. மேலும், புதிய இயக்குநர்களாக ஸ்ரீ துர்கா சங்கர் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ பக்ராய் மாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
