₹16.56 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்
Gopal Snacks நிறுவனத்திற்கு, ராஜ்கோட் CGST தலைமையகத்தின் கூடுதல் ஆணையர், 'Fried Fryms' என்ற தின்பண்டத்தை தவறான HSN குறியீட்டில் வகைப்படுத்தியதாகக் கூறி ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் (Show Cause Notice) அனுப்பியுள்ளது.
இந்த அறிவிப்பு 2022-23 நிதியாண்டுக்கானது. இதன் கீழ், ₹16.56 கோடி ரூபாய் கூடுதல் வரி செலுத்தும்படி கோரப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தொகை ஏற்கப்பட்ட கடனாக நிறுவனம் கருதவில்லை.
நிறுவனத்தின் பதில் என்ன?
கடந்த காலங்களில் இது போன்ற ஜிஎஸ்டி வகைப்பாடு தொடர்பான பிரச்சனைகளில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, ஸ்டே (Stay) ஆர்டர்களைப் பெற்ற அனுபவம் Gopal Snacks-க்கு உள்ளது. 2017-18 முதல் 2021-22 வரையிலான ஆண்டுகளுக்கும் இதே போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அந்த வெற்றிகளின் அடிப்படையில், தற்போது வந்துள்ள இந்த புதிய நோட்டீஸுக்கும் நிறுவனம் பதிலளித்து, சட்டப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. முந்தைய காலங்களுக்கு கிடைத்தது போலவே, இந்த வழக்கிலும் சாதகமான உத்தரவு கிடைக்கும் என நிறுவனம் நம்புகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த வரி விதிப்பு விவகாரத்தால் நிறுவனத்தின் நிதிநிலையில் பெரிய பாதிப்பு ஏற்படாது என்று நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், சட்டப்பூர்வமான தீர்ப்பு இறுதியாக எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். FMCG துறையில் இது போன்ற HSN குறியீடு தொடர்பான வரி சர்ச்சைகள் வருவது சகஜமான விஷயம்.
