Mahindra & Mahindra நிறுவனம் தனது Electric Origin SUV கார்களுக்கான 'Battery-as-a-Service' (BaaS) திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. இனி XEV 9S மற்றும் XEV 9e மாடல்களுக்கும் இந்த வசதி கிடைக்கும்.
விலையில் மாற்றம் வருமா?
Mahindra & Mahindra-ன் இந்த அதிரடி மாற்றத்தால், எலக்ட்ரிக் கார்களின் தொடக்க விலை ₹11.45 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி பயன்பாட்டிற்கான செலவு கிலோமீட்டருக்கு ₹3.75 என கணக்கிடப்பட்டுள்ளது.
BaaS திட்டம் என்றால் என்ன?
பொதுவாக எலக்ட்ரிக் காரின் விலையில் பேட்டரியின் விலை பெரும் பகுதியை கொண்டிருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், காரின் விலை மற்றும் பேட்டரியின் விலை என இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து கடன் (Dual-loan structure) வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆரம்பத்தில் செலுத்த வேண்டிய தொகை கணிசமாகக் குறையும்.
நீங்கள் கவனிக்க வேண்டியவை:
- இந்தத் திட்டம் ஒரு ஃபைனான்ஸ் முறை மட்டுமே, பே-பர்-யூஸ் (pay-per-use) சந்தா கிடையாது.
- கடன் ஒப்புதல் என்பது முழுக்க முழுக்க அந்தந்த நிதி நிறுவனங்களின் முடிவைப் பொறுத்தது.
- ₹3.75/km என்பது நாளொன்றுக்கு 60 கி.மீ ஓட்டுவதைக் கணக்கில் கொண்டு சொல்லப்பட்டுள்ளது.
- சார்ஜிங், மெயின்டனன்ஸ், இன்சூரன்ஸ், மற்றும் சாலை வரி (Road tax) ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்காது.
இந்த புதிய உத்தி மூலம், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல Mahindra திட்டமிட்டுள்ளது.
